அரியலூர் நகரில் உள்ள பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பயணிகள் அண்ணா சிலை அருகே நிறுத்தப்படும் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நகராட்சி சார்பில் அண்ணா சிலையின் வலதுபுறம் பொதுமக்களின் வசதிக்காக கல்லால் ஆன நாற்காலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நாற்காலி உடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. இதேபோல் அரியலூர்-செந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கல்லால் ஆன நாற்காலியும் உடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.