பயணிகள் கடும் அவதி

Update: 2024-07-07 11:37 GMT

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் எனில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கரூர்- சேலம் செல்வதற்காக சாலையோரத்தில் பஸ் நிறுத்த நிழற்குடைகள் இருபுறமும் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை அகற்றப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி