"தினத்தந்தி" புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-06-30 11:36 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே புதிதாக 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் மிகவும் பெரிதாக இருப்பதால் சிறிய வாகனங்கள் அதன் மீது ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வேகத்தடையை அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்