நிழற்குடை வேண்டும்

Update: 2024-06-30 11:35 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரோட்டில் இந்திரா நகர் தேசிய நெடுஞ்சாலை அருகில் பள்ளப்பட்டி பிரிவு ரோடு உள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்களும், திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்களும் குறிப்பிட்ட பள்ளப்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கிறது. இதில் திண்டுக்கல்லில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பஸ்கள் இந்திரா நகர் அருகே பள்ளப்பட்டி பிரிவு ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வது வழக்கம். குறிப்பிட்ட பள்ளப்பட்டி பிரிவு ரோட்டில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பள்ளப்பட்டிக்கு செல்லும் பொதுமக்கள் பஸ்சுக்காக வெயிலில் நின்று சிரமப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்