"தினத்தந்தி" புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-06-16 12:08 GMT

கரூர் மாவட்டம், மின்னாம் பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் உள்ள சந்தன காளிப்பாளையம் சுடுகாடு பகுதியில் உள்ள தார் சாலை குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைத்து விபத்து நடைபெறும் இடத்தில் வேகத்தடை அமைத்துள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்