பயன்பாட்டிற்கு வந்த பாலம்

Update: 2024-06-16 11:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், எழுமூர்- கீழப்புலியூர் செல்லும் சாலையின் குறுக்கே செல்லும் காற்றாட்டு வாய்க்காலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி தற்போது வரை முடிவடையாமல் காலதாமதமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலப்பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்