அரியலூர்-வி.கைகாட்டி செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் சாலையில் அதிவேகமாக சென்று வருவதால் அந்த வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்து அபாயம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.