அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள்

Update: 2024-06-09 15:58 GMT

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், காருடையாம்பாளையம், பாலமலை உள்ள பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிரசர்கள், கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தயாரிக்கப்படும் சிறிய, மிகச் சிறிய, பெரிய ஜல்லிக்கற்கள், சம்பட்டி கற்கள், அரளை கற்கள், செயற்கை மணல்கள் மற்றும் பல்வேறு ரகமான கற்களை லாரிகளில் அனுப்பி வைக்கின்றனர். இவை அதிக அளவில் ஏற்றிச்செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்