பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
பல்லடம் - செட்டிபாளையம் மாநில நெடுஞ்சாலையில் எலந்த குட்டை அருகே உள்ள செம்மிபாளையம் பிரிவில், தரைமட்ட பாலம் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அந்தப் பாலம் தற்போது பழுதடைந்து, விரிசல் விட்டு, பலகீனமான நிலையில் காணப்படுகிறது. மேலும் அந்த பாலத்தில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுவதால், எலந்த குட்டையில் இருந்து செம்மிபாளையம் சாலை வழியாக வரும் மழை நீர், சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிவரும் வரும் போது பாலத்தின் வழியாக எலந்த குட்டைக்குள் செல்ல வழியின்றி தார்ச்சாலைகளில் வீணாக செல்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள களிமண் காடுகளுக்குள்ளும் மழைநீர் வீணாகி செல்கிறது. எனவே பழுதடைந்த பாலத்தை மாற்றி, புதிய தரைமட்ட பாலம் கட்டி தர வேண்டும்
முருகன்,செம்மிபாளையம்.
98787 546354