ஆபத்தான பஸ் நிறுத்தம்

Update: 2024-06-02 18:02 GMT

சேலம் நான்கு ரோடு - பழைய பஸ் நிலையம் இடையே அண்ணா பூங்கா பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையத்திற்கு வரும் ஒரு சில பஸ்கள் சாலையின் நடுவே நின்று செல்கிறது. இதனால் பயணிகள் பஸ்சை விட்டு இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களால் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அனைத்து பஸ்களும் சாலையோரம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரண், அரிசிபாளையம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி