இருசக்கர வாகனங்களால் இடையூறு

Update: 2026-05-24 16:36 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக பல இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக டவுன் பஸ்கள் பயணிகள் இறக்கி, ஏற்றி விடும் இடத்தில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது குறித்து காவல் துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்