கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் வடக்கு தியேட்டர் அருகே சாலையின் மைய பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த இடத்தில் வாகனங்கள் வரும்போது நிலைதடுமாறி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.