திருவள்ளூர் மாவட்டம், கூட்டுரோடு ஜி.என்.டி சாலையில் சிக்னல் இல்லை. இந்த சாலையில் சிக்னல் இல்லாததால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் உண்டாகிறது. சிக்னல் இல்லாததால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, இந்த சாலையில் சிக்னல் அமைத்து தர போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.