நெல்லை அருகே பத்தமடையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பயணிகள் நிழற்கூடத்தை அகற்றினர். பின்னர் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.