குறுகலான சாலை

Update: 2024-05-12 12:22 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்கும்போது சாலை ஓரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்