தடுப்பு சுவர் தேவை

Update: 2024-05-12 07:40 GMT

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட மண்ணடி கிராமத்துக்கு செல்வதற்காக ஆண்டித்தோப்பிற்கும் சீதப்பாலுக்கும் இடையே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பாலத்தின் சேதமடைந்தும், பக்கவாட்டில் இருபுறமும் விபத்து தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தை சீரமைப்பதுடன், பாலத்தின் பக்கவாட்டில் இருபுறமும் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்துராஜன், மண்ணடி. 

மேலும் செய்திகள்