போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-28 17:40 GMT

நாமக்கல் கோட்டை சாலையில் பழமையான நரசிம்மசாமி மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தினசரி வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் போதுமான பார்க்கிங் வசதி இல்லை. இதனால் அடிக்கடி கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி