பஸ் வசதி வேண்டும்

Update: 2024-04-28 15:43 GMT

சதுமுகை அருகே உள்ள கெம்மநாய்க்கன்பாளையத்தில் இருந்து அந்தியூர் செல்வதற்கு பஸ் வசதி கிடையாது. இதனால் பயணிகள் கெம்மநாய்க்கன்பாளையத்தில் இருந்து கோபி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பணவிரயம் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே சதுமுகை - கெம்மநாய்க்கன்பாளையத்தில் இருந்து டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி வழியாக அந்தியூருக்கு அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்