மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் நெடுஞ்சாலையில் வினாயக்குடி அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அதன் அருகே வாகனங்கள் சென்று வர வசதியாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப்பாதை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் அதிகளவில் புழுதி பறக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி மாற்றுப்பாதையை முறையாக சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.