விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் விலக்கு நான்கு வழிச்சாலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. நிழற்குடையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நிழற்குடை எப்போதும் விழும் என்ற நிலையில் உள்ளது. விபரீதம் ஏதும் நேருவதற்கு முன்பாக இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.