அந்தியூரில் இருந்து டி.என்.பாளையம் மற்றும் கோபி செல்வதற்கு அரசு டவுன் பஸ் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படவில்லை. இதனால் தினமும் பஸ்சில் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அனைவரின் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?