சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை. அந்தியூர் செல்ல குறிப்பிட்ட நேரம் மட்டும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி, கள்ளிப்பட்டி, பங்களாப்புதூர், டி.என்.பாளையம் வழியாக சத்தியமங்கலத்துக்கு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட ஈரோடு மாவட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?