நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

Update: 2024-03-31 12:15 GMT

திருச்சி மாநகராட்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துறையூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கிருந்து பஸ் ஏறி செல்லும் பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏரி செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்