செஞ்சி புறவழிச்சாலையில் உள்ள திருவண்ணாமலை சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் அந்த வழியாக பொதுமக்கள் செல்லவே பெரும் அச்சப்படுகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.