சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து மானாமதுரைக்கு இரவு நேரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இவ்வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.