உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த கானப்பாடி, 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழும் கிராமமாகும். துறையூரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமத்திற்கு காலையும், மாலையும் என 2 முறை மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் அவசர தேவைகளுக்காக மதிய வேளைகளில் பஸ்சுக்காக 2 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதிய வேளையிலும் ஒரு முறை பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.