அரியலூர் ஒன்றியம் நாகமங்கலம் அருகே உள்ள காஞ்சலி கொட்டாய் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து இந்த பயணிகள் நிழற்குடையில் அமராமல் வெயில் மற்றும் மழை காலங்களில் பயணிகள் நிழற்குடையின் வெளியே நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.