பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-03-17 15:34 GMT

 அந்தியூரில் இருந்து கொடிவேரி அணை செல்வதற்கு பஸ் வசதி கிடையாது. இதனால் பயணிகள் அந்தியூரில் இருந்து கோபி சென்று அங்கிருந்து கொடிவேரிக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணவிரயம் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. கொடிவேரியில் இருந்து டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூருக்கு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்