பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-03-17 15:32 GMT

அந்தியூரில் இருந்து அத்தாணி வழியாக கோபி செல்வதற்கு காலை 6.25, 6.50 மணிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு மேல் 8.55 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 8.10 மணிக்கு மேற்கண்ட வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்