பெரம்பலூரில் இருந்து குன்னம் செல்லும் சாலையில் அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதினால் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.