டிக்கெட் முன்பதிவு மையம் வேண்டும்

Update: 2024-03-17 13:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு டிக்கெட் முன்பதிவு மையம் இல்லாமல் இருக்கிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பயணிகளின் நலன் கருதி குத்தாலம் ரெயில் நிலையத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும்.



மேலும் செய்திகள்