ரெயில் நிலையத்துக்குள் செல்லாத பஸ்கள்

Update: 2024-03-10 17:29 GMT

திருச்சி ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான ரெயில்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். தில்லைநகர், பாலக்கரை பகுதிகளில் இருந்து தலைமை தபால் நிலையம் வழியாக திருச்சி மத்திய பஸ்நிலையம் செல்லும் அனைத்து பஸ்களும் திருச்சி ரெயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். ஆனால் தனியார் பஸ்களும், சில அரசு பஸ்களும் ரெயில்நிலையத்துக்குள் செல்வதில்லை. மாறாக அங்குள்ள ரவுண்டானா பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகிறார்கள். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன், ரெயில் நிலையத்துக்குள் பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்து பஸ்கள் வராமல் ஏமாற்றமடைந்து தங்கள் உடைமைகளை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பயணிகள் நடந்து மீண்டும் ரவுண்டானா பகுதிக்கு வந்து பஸ் ஏறி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே ரெயில் நிலையத்துக்குள் பஸ்கள் முறையாக வந்து செல்லவும், அவ்வாறு வராமல் செல்லும் பஸ்களின் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்