பயணிகள் காத்திருப்பு கூடமான புறக்காவல் நிலையம்

Update: 2024-03-10 16:28 GMT

பயணிகள் காத்திருப்பு கூடமான புறக்காவல் நிலையம்

பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை அடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் புறக்காவல் நிலையம் செயல்படவில்லை. இதனால் பயணிகள் காத்திருப்பு கூடமாக புறக்காவல் நிலையம் மாறி உள்ளது. போலீசார் இல்லாததால் பயணிகள் அமர்ந்து காத்திருப்பு கூடமாக புறக்காவல் நிலையம் மாறி வருகிறது. எனவே போலீசார் புறக்காவல் நிலையத்தை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்

கார்த்திகேயன்,பல்லடம்.

89876 36376

மேலும் செய்திகள்

பஸ் வசதி