ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.