அரியலூர் நகரில் உள்ள விளாங்கா தெருவில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலின் மேல் பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே பலமாக காணப்படுகிறது. இதனால் இந்த நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும்போது இந்த நடைபாதை இடிந்து விழுந்தால் பொதுமக்கள் வாய்க்காலில் விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.