மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுப்புற பகுதிகளில் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக பயணிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?