சென்னை பல்லாவரம் அருகில் உள்ள திருத்தணி நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. பணி முடிந்ததும் சாலையோரம் தோண்டப்பட்ட மண் மற்றும் குழாய்களை அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.