குறுகிய பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-03-03 11:44 GMT

திருச்சி மாவட்டம் எஸ்.ஐ.டி. வழியாக அரியமங்கலத்திற்கு செல்லும் சாலையில் ஆற்றுப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆற்றுப்பாலம் சிறிய அளவில் குறுகலாக உள்ளதால் இந்த பாலத்தின் வழியாக செல்லும் கனரக வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் இருபுறமும் வாகனங்கள் வரும்போது இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு பெரிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்