தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு ஊராட்சியை சேர்ந்த வேலாகுடி கிராமத்தில் பயணிகள் நிழலகம் இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பஸ்சுக்காக சாலையோரத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். குறிப்பாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லும் முதியவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?