திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை, நம்பர் ஒன் டோல்கேட் வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவில் வரை தினமும் நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்கு பிறகு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.