அரியலூர் வட்டம், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர் கிராம பகுதியில் இருந்து உடையார்ப்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம், கும்பகோணம் செல்ல அரியலூர் வந்துதான் செல்ல வேண்டும். இதனால் கூடுதல் செலவு மற்றும் நேர விரையம் ஏற்படுகிறது. எனவே அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு கல்லங்குறிச்சி, அயன்ஆத்தூர், இரும்புலிக்குறிச்சி வழியாக நேரடி பஸ் சேவை தொடங்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.