பணிகள் முழுமை பெறாத நிழற்குடை

Update: 2024-02-04 12:52 GMT

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி ஊராட்சி, சந்தனகாளிபாளையம் பகுதியில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேற்கூரை, அமரும் இடம் பணிகள் செய்யப்பட்டு, மேலும் சில பணிகள் முழுமையாக முடியாமல் உள்ளது. தரை மட்ட பகுதியில் சிமெண்டு தளம் அமைக்கப்படாமல், அதற்கு வேண்டிய சிமெண்டு கலவைகள் கொட்டி வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பணிகளை முழுமையாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு நிழற்குடையை கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி