பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்

Update: 2024-01-28 13:12 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் புங்கம்பாடி சாலையில் தேசிய நெடுஞ்சாலை அருகே சார்பு நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், க.பரமத்தி உள்ளிட்ட அரவக்குறிச்சி தாலுகா பகுதி பொதுமக்கள் தங்களின் நிலப்பிரச்சினை, பொது நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டுமானால் அரவக்குறிச்சியில் உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு தான் வரவேண்டும். அரவக்குறிச்சியில் இருந்து திருச்சி, ஈசநத்தம், வெள்ளோடு செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றம் அருகில் பஸ் நிறுத்தம் அமைந்தால் அது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றம் அருகில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி