ஷேர் ஆட்டோ வசதி

Update: 2024-01-21 17:00 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிய பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் அனைத்தும் ஏற்கனவே இருந்த ஒருவழிப்பாதைக்கு பதிலாக தற்போது அண்ணாசாலை வழியாக புதிய ஒருவழிப்பாதையில் செல்கின்றன. இதனால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோட்டிலிருந்து ராசிபுரம் வரும் பஸ் பயணிகள் ரா.புதுப்பாளையம் ரோடு, கிருஷ்ணா தியேட்டர் ரோடு, பட்டணம் ரோடு, பெரியசாமி கடை பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஷேர் ஆட்டோ வசதி செய்து கொடுத்தால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்