பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2024-01-14 13:03 GMT

கரூர்-ஈரோடு சாலையில் அமைந்துள்ள நொய்யல் குறுக்குச் சாலையில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். நொய்யல், மராபாளையம், வெள்ளியம்பாளையம், அண்ணா நகர், குப்பம், வளையாபாளையம், பெரிய வட்டம், ஆவுடையார்பாறை, வெங்கமேடு, சோழ காளிபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து குறுக்கு சாலைக்கு வந்து பஸ்சில் செல்கிறார்கள். அதிவிரைவு பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இன்று நின்று செல்கின்றன. இந்த நிலையில் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயில், மழையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.   

மேலும் செய்திகள்