முழுமைபெறாத பயணிகள் நிழற்குடை

Update: 2024-01-07 12:38 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலையில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டபோது, இங்கு அமைக்கப்பட்டு இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. அதன் பின் இப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் இந்த பணி முழுமை அடையாமல் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி