புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் உள்ள மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அது அகற்றப்பட்டது. இன்னும் அங்கு புதிதாக நிழற்குடை அமைக்கப்படாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?