பெருந்துறையில் இருந்து அந்தியூர் சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக பயணம் செய்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். பெருந்துறையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது. எனவே பெருந்துறையில் இருந்து பெத்தாம்பாளையம், கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் வழியாக அந்தியூர் செல்வதற்கு பஸ் வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?