கரூர் ரெயில் நிலையம் வாயில் முன்பு ரெயில்கள் வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் உள்ளிட்டவை குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் பலகை அமைக்கப்பட்டு அதன் மூலம் ரெயில்கள் வரும் நேரம் புறப்படும் நேரம் மற்றும் பெட்டிகளின் விபரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டிஜிட்டல் பெயர் பலகை பழுதடைந்து அகற்றப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட பலகை பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.