சமீப காலமாக பிரதான நகரப் பகுதியான அரவக்குறிச்சி-கரூர் மெயின் ரோட்டுப்பகுதியில் வெள்ளாடுகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக செல்கின்றன. அதாவது ஆட்டுக்கு சொந்தக்காரர்கள் காலையில் ஆடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். அவைகள் மெயின் ரோடு வழியாக நடந்து சென்று ரோட்டு ஓரங்களில் மேய்ந்து வருகிறது. குறிப்பாக ஆட்டுக்கு சொந்தக்காரர்கள் யாரும் உடன் இருப்பதில்லை. இதனால் ஆடுகள் நடுரோட்டில் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.